29 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
பெண்கள் அதிகம் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் முக்கியமானது காஜல் என அழைக்கப்படும் கண் மை.
இந்த கண் மையில் அதிக அளவில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை பயன்படுத்துவதன் மூலம் நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ரசாயனம் கலக்கப்பட்ட காஜலை பயன்படுத்தும் போது எது கண் எரிச்சல், கண்கள் சிவப்பாவது உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
ரசாயனம் மிகுதியான காஜலை பயன்படுத்தும்போது அது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
நீங்கள் பயன்படுத்தும் காஜல் பென்சில் தூய்மையாக இல்லை என்றால் கண்ணில் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
கண்ணில் ரசாயனம் கலந்த காஜலை பயன்படுத்தும்போது, பயன்படுத்தும் இடங்களில் கட்டி வர வாய்ப்புள்ளது.