மளிகை பொருட்களில்  வண்டு அரிக்காமல் இருக்க இதை பண்ணுங்க

04 July 2024

Pic Credit: Unsplash

மளிகை பொருள்

மளிகை பொருட்கள் சமையலுக்கு மிகவும் முக்கியமானவை. இதனால், அடிக்கடி மளிகை பொருட்களை வாங்குவதை தவிர்த்து ஒரு மாதத்திற்கு தேவையானதை வீட்டில் வாங்கி வைக்கின்றனர்

வண்டு அரிப்பு

மளிகை பொருட்கள் பூச்சி, வண்டு அரிப்பதால் அதை பயன்படுத்தாத சூழல் ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்

மிளகாய் தூள்

மிளகாய் தூளில் சிறிதளவு உப்பு சேர்த்து வைத்தால் வண்டு பூச்சி அரிக்காமல் இருக்கும்

சர்க்கரை

சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமல் இருக்கு 4 கிராம்புகளை போட்டு வைக்கலாம்

மாவு

அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டு, பூச்சி அரிக்காமல் இருக்க துணியில் உப்பை கட்டி மாவுக்குள் போட்டுவிட வேண்டும்

உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பை பூச்சி அரிக்காமல் இருக்க 4 வர மிளகாயை உளுத்தம் பருப்போடு சேர்த்து மூடி வைக்கலாம்

பருப்புகள்

பருப்பு வகையில் வண்டு, பூச்சி அரிக்காமல் இருக்க கடாயில் பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆறவைத்து மூடி வைக்கலாம்