31 October 2024
Pic credit - freepik
Author : Mukesh
தீபாவளியை முன்னிட்டு எண்ணெய் அதிகம் இழுக்காமல் வடை சுடுவது எப்படி என்று பார்ப்போம்.
வடை சுடும்போது, பலர் வடை மாவை தண்ணீர் விட்டு அரைக்கிறார்கள். இது அதிக எண்ணெயை உறிஞ்சும்.
வடையின் மாவை கெட்டியாக அரைத்து வடை சுட்டால், அதிக எண்ணெயை உறிஞ்சுவது கிடையாது.
எண்ணெய் மிகவும் சூடாக இருக்கும்போது வடைகளை போடவும். சூடு குறைவாக இருக்கும்போது போட்டால் அதிக எண்ணெய் உறிஞ்சும்.
அதிகளவிலான சூடும் வேண்டாம். நடுத்தரத்தை விட சூடாக இருப்பது போதுமானது. அதிக சூடாக எண்ணெய் இருந்தால் வடை கருகி போகவும் வாய்ப்பு உண்டு.
வடை, பஜ்ஜி, எண்ணெயில் பொரித்த உணவுகளை அப்படியே சாப்பிட வேண்டும். இது வயிற்று பிரச்சனையை தரும். .
மாறாக, டிஷ்யூ, பட்டர் பேப்பர் உள்ளிட்டவற்றில் வைத்து சாப்பிடலாம். இது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி ஆரோக்கியம் தரும்.