உடல் எடை குறைக்க உதவும் பீன்ஸ்..

15 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

பீன்ஸ்

கிட்னி பீன்ஸ், டபுள் பீன்ஸ், கருப்பு பீன்ஸ், சோயா பீன்ஸ் என பீன்ஸில் பல வகைகள் உண்டு

சத்துக்கள்

பச்சை பீன்ஸில் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளது

நார்ச்சத்து

இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் இது உடல் எடை  குறைக்க மிக சிறந்த உணவாகும்

தசை வலிமை 

இதனை சாப்பிடுவதால் அதிக நேரம் பசி எடுக்காமல் இருக்கும் மேலும் தசைகள் வலுவாக இருக்க உதவும்

இதய நோய் 

இதில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவுவதோடு இதய நோய் வராமல் தடுக்கும்

போலேட்

இதில் போலேட் என்ற அமிலம் இருப்பதால் கரு வளரும் குழந்தைக்கு இது மிகவும் உகந்தது

செரிமானம்

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு அருமருந்தாகும், மேலும் நுரையீரல் பாதிப்பு அபாயத்தை குறைக்கும்