30 OCT 2024

குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க

Author Name : umabarkavi

Pic credit - Getty

குக்கர்

 விரைவாக சமைப்பதற்கு பிரஷர் குக்கரை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், குக்கரில் சமைத்து சாப்பிடுவதால் சில பிரச்னைகள் வரலாம்

குக்கர்

குறிப்பாக சில உணவுகளை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்

காய்கறிகள்

காய்கறிகளில் தாதுக்கள், வைட்டமின்கள் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பிரஷர் குக்கரில் சமைக்கும்போது அவை முற்றிலும் இல்லாமல் போயிடும்

அரிசி

குக்கரில் அரிசியை சமைத்தால் அதிலிருந்து வெளிவரும் நீர், ஒரு ரசாயனத்தை உருவாக்குவதால் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

உருளை

உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் சமைப்பது சரியானது அல்ல. குக்கரில் ஏற்படும் அதிக வெப்பநிலை, உருளைக்கிழங்கின் மாவுச்சத்தை குறைக்கும்

மீன்

மீனை குக்கரில் சமைக்கும்போது, அதிக வெப்ப நிலை காரணமாக அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அழியும். மேலும், சுவையும் குறையும்

கீரைகள்

பிரஷர் குக்கரில் கீரையை சமைக்கக் கூடாது. குக்கரில் சமைத்தால் அதிலுள்ள சத்துக்கள் குறையும்