30 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து அதில் 2 ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி உலர்ந்த பின் கழுவிவர முகச்சுருக்கம் மறையும்.
பாலேட்டுடன் 2 ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவர முகச்சுருக்கம் நீங்கும்.
முட்டையில் வெள்ளை கருவில் தேன் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகச்சுருக்கம் மறையும்.
ஆலிவ் ஆயிலை முகத்தில் நன்கு மசாஜ் செய்து முகம் கழுவிவர முகச்சுருக்கம் நீங்கும்.
பச்சை முட்டையுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி உலர்ந்த பிறகு கழுவிவர முகம் பளபளப்பாகும்.
வாழைப்பழத்தை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகச்சுருக்கம் மறையும்.
முகம் வறட்சியாக இருக்கும் நபர்கள் விளக்கெண்ணெயை முகத்தில் தடவி இரவு முழுவதும் உலரவிட்டு காலையில் முகம் கழுவிவர முகச்சுருக்கம் மறையும்.