30 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
மழைக்காலத்தில் கீரைகள் மற்றும் காய்கறிகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இதன் காரணமாக நுண்ணுயிரிகள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மழைக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பு காரணமாக கீரைகள் மற்றும் காய்கறிகளில் அசுத்தங்கள் மற்றும் நச்சுத்தன்மை படியும் வாய்ப்பு உள்ளது.
மழைக்காலத்தில் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் காய்கறிகள் மற்றும் கீரைகளில் பூஞ்சை தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
மழைக்காலத்தில் காயக்றி மற்றும் கீரைகளில் பூச்சிக்கொள்ளிகளின் எச்சம் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
மழைக்காலத்தில் செரிமானம் சற்று மெதுவாக இருக்கும் என்பதால் காயக்றிகள் மற்றும் கீரைகளை அதிக அளவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
மழைக்காலங்களில் மண்ணில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் கீரைகள் மற்றும் காய்கறிகளில் சேராமல் போகலாம்.
அந்த வகையில் முட்டைக்கோஸ், பிராக்கலி, காலிஃபளவர், அரைகீரை உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது.