சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?

17 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சத்துக்கள்

சியா விதையில் அதிக அளவு நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

தீமைகள்

சியா விதைகள் உடலுக்கு எந்த அளவு நன்மை அளிக்கிறதோ, அதே அளவுக்கு அதில் ஆபத்துக்களும் நிறைந்துள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. 

செரிமானம்

சியா விதைகளை அதிக அளவு சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

நீர் பற்றாக்குறை

சியா விதைகள் அதிக அளவு தண்ணீர் உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டது. எனவே சியா விதைகளை சாப்பிடுவதன் மூலம்  உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு

சியா விதைகளை அதிக அளவு உட்கொள்வதன் மூலம் மற்ற ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதலை பாதிக்கலாம்.

ஒவ்வாமை

சியா விதைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

ரத்த சர்க்கரை

சியா விதைகளை அதிக அளவு உட்கொள்வது உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்ககூடும். 

மேலும் படிக்க