புதிதாக ஒருவருடன் உரையாடலை தொடங்க எளிய வழிகள்

2 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

யாருடன் நீங்கள் பேச விரும்புகிறீர்களோ அவர்களின் ஆடைகள் அல்லது தனிப்பட்ட திறமையை பாராட்டும் போது உரையாடல் எளிதாக தொடங்கும்.

பாராட்டு

ஓய்வு நேரங்களில் அவர்கள் என்ன செய்து மகிழ்கிறார்கள், எப்படி நேரத்தை செலவு செய்தீர்கள் என கேட்கலாம்

நேரம் செலவு

பிரபலமான நிகழ்வு அல்லது பரபரப்பான செய்தி குறித்த பேச்சுக்கள் மூலம் நாம் உரையாடலை வளர்க்க முடியும்

பரபரப்பு

சில விஷயங்களில் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் உரையாடல்கள் நீளும்

அனுபவம்

ஏதேனும் புத்தகம், திரைப்படம் அல்லது உணவகம் குறித்த பரிந்துரை பேச்சுக்கள் தொடங்கும் போது அந்த உரையாடல் ஆரோக்கியமானதாக செல்லும்

பரிந்துரை

சமூகத்தில் பிரபலமான நிகழ்ச்சி அல்லது நிகழ்வுகளை பற்றி பேசும்போது உரையாடல் தொடர்கதையாக மாறும்.

கலாச்சாரம்

இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறீர்கள் என்றால் அந்த சூழல் எப்படியாக இருக்கிறது? என கேட்பதன் மூலம் பேச்சுக்கள் சிறப்பாக அமையும்

சூழல்