பிங்க் பால் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்..!

29 November 2024

Pic credit - freepik

Author : Mukesh 

        2வது டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி பிங்க் பந்தில் நடக்கிறது.

    அதிக விக்கெட்

அடிலெய்டில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பிங்க் பந்து நடைபெறும் நிலையில், பிங்க் பந்து வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களை பார்க்கலாம்.

         ஸ்டார்க்

பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் 12 டெஸ்ட் போட்டிகளில் 66 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

             லயன்

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 12 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார்.

        ஹேசில்வுட்

பிங்க் பந்து டெஸ்டில் ஹேசில்வுட்  9 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். 

          கம்மின்ஸ்

ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ், 7 பிங்க் டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

        யாசிர் ஷா

பாகிஸ்தானின் யாசிர் ஷா இதுவரை 4 பிங்க் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.