16 September 2023
Author : Umabarkavi
Pic credit - Getty
தற்போதுள்ள வாழ்க்கை சூழலில் அதிகாலையில் எழுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிகாலையில் எழுவது பல நன்மைகளை தரும்
எனவே தினமும் அதிகாலை எழுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்
அதிகாலையில் எழுந்தால் நம்மை நாம் கவனித்து கொள்ள முடியும். தியானம், உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இருக்கும்
காலையில் விரைவாக எழுந்து முக்கியமான வேலைகளை ஆரம்பிக்கலாம். அதிகாலையில் எழுபவர்கள் ஆக்டிவாக இருப்பார்கள்
காலையில் சீக்கிரமாக எழும்போது தெளிவான மனநிலை கிடைக்கும். காலையில் கிடைக்கு மனத்தெளிவு அன்றைய நாளை சிறப்பாக்கும்
காலை சீக்கிரமாக எழுந்தால் உணவை நிதானமாக சாப்பிடலாம். செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்வதற்கு உதவியாக இருக்கும்
அதிகாலை எழுவதால் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்லலாம். மேலும், முன்கூட்டியே கிளம்பி அதிக போக்குவரத்தை தவிர்க்க முடியும்