12 September 2023
Pic credit - Getty
Author : Umabarkavi
மசாலா பொருட்களில் ஒன்று சீரகம். இது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது
சீரகத்தில் வைட்டமின், பொட்டாசியம் என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன
ஏகப்பட்ட நன்மைகள் கொண்ட சீரகத்தை சாப்பாட்டில் சேர்ப்பதோடு, ஊறவைத்த தண்ணீரையும் குடிக்கலாம்
ஒரு கிளாஸில் தண்ணீரை நிரப்பி சீரக விதைகளை 12 மணி நேரம் ஊறவைத்து பின் விதைகளை வடிக்கட்டி தினமும் குடித்தால் நல்லது
சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் செரிமான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்
அஜீரணம், வயிறு உப்புசம், அசிடிட்டி போன்ற பிரச்னைகளை சரி செய்ய நிச்சயம் உதவும்
சீரகத்தில் உள்ள பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்