இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா  – உமாபதி வெட்டிங் போட்டோஸ்

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், கன்னட மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன்.

ஐஸ்வர்யாவும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நெறுங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

உமாபதி, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்தார்.

அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக உமாபதி கலந்து கொண்டார்.

அந்த சமயத்தில் அர்ஜுனின் மகளுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.

இவர்கள் இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் மத்தியில் இருந்து பச்சைக்கொடி கிடைத்து தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

NEXT: சினிமாவில் இந்த பாகுபாடு வருத்தம் அளிக்கிறது – நடிகை ராஷி கண்ணா