29 November 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
கர்நாடகா மாநிலத்தின் மங்களூரில் துளு பேசும் இந்து குடும்பத்தில் 1973ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிறந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
1991ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், சர்வதேச சூப்பர் மாடல் விருது வென்றார்.
1993ம் ஆண்டு அமீர்கான் மற்றும் மஹிமா சவுத்ரியுடன் பெப்சி விளம்பரத்தில் நடித்து பிரபலமானார்.
1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று மொத்த உலகத்தையே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார்.
கடந்த 1997-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய்.
1998ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஜீன்ஸ் படம் தமிழ் சினிமாவில் பலரால் கொண்டாடப்பட்டது.
ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2 என அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது.
உலக அழகி பட்டம் தொடங்கி இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வரை பல விருதுக்கும், புகழுக்கும் சொந்தக்காரர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பேசுகையில் உலகம் முழுவதும் பெண்களுக்கு சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.