31 October 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
ஹரித்வாரில் பிறந்த வளர்ந்த நடிகை ஸ்ரேயா சரண் ஒரு தேர்ந்த கதக் மற்றும் ராஜஸ்தானி நடன கலைஞர்.
தெலுங்கில் வெளியான இஸ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமானார் ஸ்ரேயா.
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.
சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, தோரணை, மழை என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவியுடன் என கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருக்கு நாயகியாக நடித்துள்ளார் ஸ்ரேயா.
முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.