திருமணம் குறித்த கேள்வி… அஞ்சலியின் நச் பதில்!

தெலுங்கு திரை உலகின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கினார் அஞ்சலி.

நடிகை அஞ்சலியின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது என்னவோ தமிழ் சினிமாதான்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி.

கற்றது தமிழ் படத்தில் அஞ்சலி, ஆனந்தி என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தார் என்பது ரசிகர்களின் கருத்து.

அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி போன்ற படங்கள் அஞ்சலியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.

தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.

தமிழில் அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

நடிகை அஞ்சலி தற்போது ‘கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அஞ்சலியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

இப்போது நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன். நான் திருமணம் செய்த பிறகும் சினிமாவில் நடிப்பேன் என்றும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.