நடிகர் சூர்யாவின் பிறந்த நாளிற்கு ரீ ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் சமீக காலமாக 90-களில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுவது ட்ரெண்டாகி வருகிறது.

தற்போது முன்னணி நடிகர்களின் பிறந்த நாளிற்கு அவர்களது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

அந்த வகையில் அடுத்த மாதம் நடிகர் சூர்யாவின் 49-வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மாபெறும் வெற்றிப்பெற்ற சில படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

2009ம் ஆண்டு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் அயன். இப்படத்தில் சூர்யா, தமன்னா பாட்டியா, பிரபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் சூர்யாவின் பிறந்த நாளிற்கு ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் சிங்கம். அதிரடி ஆக்ஷன் கலந்த பொழுது போக்கு திரைப்படமான இது சூர்யாவின் பிறந்த நாளிற்கு ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

சூர்யா அப்பா மகன் என இரண்டு வேடத்தில் நடித்த திரைப்படம் வாரணம் ஆயிரம். கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படம் சூர்யாவின் பிறந்த நாளிற்கு ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி திரைப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா என பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் சூர்யாவின் பிறந்த நாளிற்கு ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

NEXT: கார் ரேஸ் களத்தில் அஜித்… இணையத்தை கலக்கும் போட்டோஸ்!