16 September 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் கடந்த 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தனர்.
சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது” என பதிவிட்டிருந்தார்.
சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சினிமா பிரபலங்களை எல்லாம் அழைக்காமல் எளிமையாக கோயிலில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
திருமண புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அதிதி ராவ் இனிமேல் என் வாழ்க்கையில் நீயே என் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் என கவிதை மழையாக பொழிந்துள்ளார்.
துரைராஜூக்கும், ராஜமல்லிகாவுக்கும் 1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 16 இதே தேதியில் மகளாகப் பிறந்தவர் மீனா.