நடிகர் விக்கி கௌஷலின் ‘சாவா’ படத்தின் டீசர் இதோ!
Chhaava Teaser | விக்கி கௌஷல் நடிப்பில் ‘சாவா’ என்ற படம் உருவாகியுள்ளது. இயக்குநர் லக்ஷ்மன் உடேகர் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் மசான் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகர் விக்கி கௌஷல். இவர் படங்களில் நடிப்பதற்கு முன்னதாக இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் கேங்ஸ் ஆஃப் வாஸ்யபூர் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ராமன் ராகவ் 2.0, லஸ்ட் ஸ்டோரீஸ், மன்மர்சியான், உரி தி சர்ஜிகள் ஸ்ரைக், சர்தார் உதம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது விக்கி கௌஷல் நடிப்பில் ‘சாவா’ என்ற படம் உருவாகியுள்ளது. இயக்குநர் லக்ஷ்மன் உடேகர் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.