’படைத்தலைவன்’ படத்திலிருந்து வெளியானது இளையராஜா எழுதிய பாடல்
Un Mugathai Paarkkalaiyae - Lyrical | கடந்த ஆண்டு விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகரும் நடன இயக்குநனருமான ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது.
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘படைத்தலைவன்’. இந்தப் படத்தை இயக்குநர் அன்பு இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகரும் நடன இயக்குநனருமான ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ’உன் முகத்தைப் பார்கையிலே’ என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது.
Latest Videos