டொவினோ தாமஸின் ‘ஏஆர்எம்’ ட்ரெய்லர் இதோ!
ARM (Tamil) - Trailer | தற்போது டொவினோ தாமஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’. பீரியட் டிராமாவாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி, பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, சிவாஜித் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் டொவினோ தாமஸின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஆர்எம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தை காட்டும் நடிகர் டொவினோ நடிப்பில் முன்னதாக வெளியான ‘மின்னல் முரளி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது டொவினோ தாமஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’. பீரியட் டிராமாவாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி, பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, சிவாஜித் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.