ஷேன் நிகாமின் ‘மெட்ராஸ்காரன்’ படத்திலிருந்து வெளியானது முதல் பாடல்
Thai Thakka Kalyanam - Video | இந்தப் படத்தில் ஷேன் நிகாம் உடன் கலையரசன் மற்றும் நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'மெட்ராஸ்காரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகாம் மற்றும் கலையரசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ படத்திலிருந்து முதல் பாடல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது அவர் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இதனை இயக்குநர் வாலி மோகன் தாஸ் புதுமையான திரில்லர் வடிவில் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஷேன் நிகாம் உடன் கலையரசன் மற்றும் நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சாம்.சி.எஸ். படத்துக்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தில் இருந்து ‘தை தக்க கல்யாணம்’ எனும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.