”பயத்தை தாண்டி ஒரு அடி முன்னாடி வைக்கிறேன்” – சூர்யாஸ் சாட்டர்டே ட்ரெய்லர் இதோ!
SURYA'S SATURDAY (Tamil) Trailer | இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி, எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் நானியின் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி, எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.