”எங்கவீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சுருக்கு” – கவனம் ஈர்க்கும் ‘கொட்டுக்காளி’ ட்ரெய்லர் இதோ!
Kottukkaali - Trailer | சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரில் தோன்றும் அத்தனை கேரக்டர்களும் சீரியாஸாக ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ளனர். ”எங்கவீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சுருக்கு” என்ற ஒரே ஒரு வசனம் மட்டுமே ட்ரெய்லரில் இடம்பெறுகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.