’மிஸ் யூ’ படத்திலிருந்து ‘சொன்னாரு நைனா’ லிரிக்கல் வீடியோ இதோ
Sonnaaru Nainaa Lyrical Song | காதல், ஆக்ஷன், காமெடி என முழுநீள பொழுதுபோக்கு படமாக உருவாயிருக்கிறது. ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜே.பி. பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து இரண்டாவது பாடலான ‘சொன்னாரு நைனா’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ் யூ’ படத்திலிருந்து இரண்டாவது லிரிக்கல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சித்தா’ படத்தின் வெற்றிக்கு பிறகு சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படம், ‘மிஸ் யூ’. ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். காதல், ஆக்ஷன், காமெடி என முழுநீள பொழுதுபோக்கு படமாக உருவாயிருக்கிறது. ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜே.பி. பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து இரண்டாவது பாடலான ‘சொன்னாரு நைனா’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் சித்தார்த் பாடியுள்ளனர்.