’நேசிப்பாயா’ படத்திலிருந்து வெளியானது வீடியோ பாடல்!
Solo Violin Video Song | நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் சரத் குமார், பிரபு, குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாய படத்திலிருந்து வீடியோ பாடலைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அஜித்குமார், பவன் கல்யாண் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை உருவாக்கி ‘ஸ்டார் டைரக்டர்’ என்ற அந்தஸ்தைப் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் சரத் குமார், பிரபு, குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்திலிருந்து ‘சோலோ வயிலின்’ எனும் பாடல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.