‘தேவாரா’ படத்தில் சயிஃப் அலிகான்… கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Saif Ali Khan Is Bhaira | இதில் சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், நரேன், கலையரசன், ஷைன் டாம் சாக்கோ உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் 2 பாகங்களாக உருவாகிறது. இப்படத்தினை என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இப்படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். இந்த நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவாரா’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் கொரட்டலா சிவா இயக்த்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடித்து வரும் படம், ‘தேவாரா’. இந்தப் படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். இதில் சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், நரேன், கலையரசன், ஷைன் டாம் சாக்கோ உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் 2 பாகங்களாக உருவாகிறது. இப்படத்தினை என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இப்படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். இந்த நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தேவராவின் படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சயிஃப் அலிகானின் கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.