பஹத் – ரஜினி கூட்டணி.. ‘வேட்டையன்’ படத்திலிருந்து வெளியான சூப்பர் சீன்!
தமிழ் சினிமாவின் சிகரம் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ல் வெளியான திரைப்படம் வேட்டையன். பிரபல இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் மற்றும் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியது. இத்திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், துசாரா விஜயன் போன்ற நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
வேட்டையன் : நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், துசாரா விஜயன் போன்ற நட்சத்திர நடிகர்கள் என இந்தி, தெலுங்கு , மலையாளம் போன்ற திரையுலக முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். போலி என்கவுண்டர், காதல் நகைச்சுவை மற்றும் எமோஷன் போன்ற கதைக்களத்தை உள்ளடக்கிய ஆக்ஷன் மற்றும் எமோஷன் நிறைந்த திரைப்படமானது ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி கடந்த அக்டோபர் 10ல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகியது. வேட்டையன் திரைப்படம் ரசிகர்களிடையே பல விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளை தற்போதுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படக்குழு “டெலீட்டட் காட்சியை” வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க :ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!