பிரபு தேவாவின் ‘ஜாலியோ ஜிம்கானா’ பட ட்ரெய்லர் இதோ!
Jolly O Gymkhana - Official Movie Trailer | பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
நடன இயக்குநர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில், என்னம்மா கண்ணு, சார்லி சாப்ளின், காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வியாபாரி போன்ற படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் அடுத்ததாக இயக்கும் படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.