அமரர் ஊர்தி.. யோசிக்க வைக்கும் வசனம்.. ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ ட்ரைலர்
Pogumidam Vegu Thooramillai: போகுமிடம் வெகு தூரமில்லை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விமலின் குரலில் வரும் வசனமும், அமரர் ஊர்தி வாகனமும் என படத்தின் ட்ரைலர் வித்தியாசமான உணர்வை கொடுக்கிறது. குறிப்பாக நடிகர் கருணாஸ் நடன கலைஞராக நடித்துள்ளதாக தெரிகிறது. இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கி நடிகர் விமல் நடித்துள்ள திரைப்படம் போகுமிடம் வெகு தூரமில்லை. இந்த படத்தில் கருணாஸ், ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் ஒன்று ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விமலின் குரலில் வரும் வசனமும், அமரர் ஊர்தி வாகனமும் என படத்தின் ட்ரைலர் வித்தியாசமான உணர்வை கொடுக்கிறது. குறிப்பாக நடிகர் கருணாஸ் நடன கலைஞராக நடித்துள்ளதாக தெரிகிறது. இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்