’ஜமா’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
Jama - Sneak Peek 02 | தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’. இந்தப் படத்தில் பாரி இளவழகனுடன் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கேவிஎன் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பாரி இளவழகன் இயக்கி நடித்திருக்கும் ’ஜமா’ படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’. இந்தப் படத்தில் பாரி இளவழகனுடன் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கேவிஎன் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது படத்திலிருந்து இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.