‘வாழை’ படத்திலிருந்து ‘ஒரு ஊருல ராஜா’ வீடியோ பாடல் இதோ!
Oru Oorula Raja - Video Song | கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வாழை’ படத்திலிருந்து ‘ஒரு ஊருல ராஜா’ என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’. கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜிற்கு முத்த மழை பொழிந்தனர். படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் வரும் ‘ஒரு ஊருல ராஜா’ என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை இயக்குநர் மாரி செல்வராஜே எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்பாடலை பாடியுள்ளார்.