”உன் கவலை எல்லாம் தூசா பறக்கட்டும் ராசா” – ஓ ராயா பாடல் வீடியோ இதோ!
Oh Raaya - Video Song | தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திராத கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ராயன்’ படத்திலிருந்து ஓ ராயா பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திராத கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து ஓ ராயா பாடல் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.