‘கோட்’ படத்திலிருந்து வெளியானது “மட்ட” வீடியோ பாடல்..!
"MATTA" Video Song : எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி தி கோட் படத்தை தயாரித்துள்ளார். யுவனின் துள்ளல் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடி பட்டையைக் கிளப்பியுள்ளார். இன்ஸ்டா ரீல்ஸ் முழுவதும் மட்ட பாடல் ரீ கிரியேஷன் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் தற்போது அப்பாடலின் முழு வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளது படக்குழு.
இயக்குநர் வெங்கட்பிரவு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கோட். இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள தி கோட் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார். யுவனின் துள்ளல் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடி பட்டையைக் கிளப்பியுள்ளார். இன்ஸ்டா ரீல்ஸ் முழுவதும் மட்ட பாடல் ரீ கிரியேஷன் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் தற்போது அப்பாடலின் முழு வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளது படக்குழு.