‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்திலிருந்து `காத்திருந்தேன்’ பாடல் வெளியானது
Kathirundhen Lyrical Video | இயக்குநர் சீனு ராமசாமி முன்னதாக இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்கள் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர்.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்திலிருந்து ‘காத்திருந்தேன் பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி முன்னதாக இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்கள் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். இந்த நிலையில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள ‘காத்திருந்தேன்’ பாடல் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.