ஸ்ரேயா கோஷல் குரலில் ‘மலை’ படத்திலிருந்து வெளியான பாடல்!
Kannasara Aaraaro - Lyric Video | அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கத்தில் யோகிபாபு, லக்ஷ்மி மேனன், காளி வெங்கட் மற்றும் குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம் 'மலை’. இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘மலை’ படத்திலிருந்து பாடகி ஸ்ரேயா கோஷல் பாடிய பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கத்தில் யோகிபாபு, லக்ஷ்மி மேனன், காளி வெங்கட் மற்றும் குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம் ‘மலை’. “மனித வாழ்வு இயற்கையோடு இணைந்தது. ஆனால், மனித பேராசை இயற்கையை மொத்தமாக அழிவின் விளிம்பில் கொண்டு வந்து இன்று நிறுத்தியிருக்கிறது. தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் கதையான இதில் மனிதனின் சுயநலப் பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதை பேசியிருக்கிறோம்” என்கிறது படக்குழு. இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்திலிருந்து ‘கண்ணசர ஆராரோ’ பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.