ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ பட ட்ரெய்லர்.!
Kadaisi Ulaga Por Trailer : ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது தன்னுடைய 3வது படத்தை இயக்கி ரிலீஸை நோக்கி நகர்த்தியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா தானே எழுதி இயக்கி நடித்துள்ள அடுத்த படத்திற்கு 'கடைசி உலகப் போர்' என்று பெயரிட்டுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது
கடைசி உலகப் போர் : ராப் பாடகர் டூ இசையமைப்பாளர், இசையமைப்பாளர் டூ நடிகர், நடிகர் டூ இயக்குநர் என சினிமாவில் அடுத்தடுத்த கட்டம் நகர்ந்து வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது தன்னுடைய 3வது படத்தை இயக்கி ரிலீஸை நோக்கி நகர்த்தியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா தானே எழுதி இயக்கி நடித்துள்ள அடுத்த படத்திற்கு ‘கடைசி உலகப் போர்’ என்று பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஆல் இன் ஆலாக ஹிப் ஹாப் ஆதியே களமிறங்கியுள்ளார். அதாவது இப்படத்தில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என முக்கிய வேலைகளையெல்லாம் அவரே கவனித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது