அரசியல் அண்டர்டேக்கர்.. ‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் அடுத்த பாடல்!
Arasiyal Undertaker : கடைசி உலகப் போர் திரைப்படத்தில் இருந்து "அரசியல் அண்டர்டேக்கர்" என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை ஹிப்ஹாப் ஆதி மற்றும் மகாலிங்கம் என இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
அரசியல் அண்டர்டேக்கர் பாடல் : கடைசி உலகப் போர் திரைப்படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவருடன் காஷ்மீரா, நாசர், நட்டி ,அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திலிருந்து “அரசியல் அண்டர்டேக்கர்” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை ஹிப்ஹாப் ஆதி மற்றும் மகாலிங்கம் என இருவரும் இணைந்து பாடியுள்ளனர். அரசியல் மற்றும் வருங்கால கதையைக் கற்பனைக் கொண்டு இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
Also Read : “ரஜினியுடன் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம்” வேட்டையன் திரைப்பட நடிகைகள் பேச்சு!