அம்மு அபிராமி நடிப்பில் ‘ஜமா’ பட ட்ரெய்லர் இதோ!
Jama | தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’. இந்தப் படத்தில் பாரி இளவழகனுடன் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கேவிஎன் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது.
பாரி இளவழகன் இயக்கி நடித்திருக்கும் ’ஜமா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’. இந்தப் படத்தில் பாரி இளவழகனுடன் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கேவிஎன் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.