“உன் கிட்டச் சொல்ல” கடைசி உலகப்போரின் அடுத்த பாடல் இதோ.!
Unkitta Solla : நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ல் வெளியான திரைப்படம் தான் "கடைசி உலக போர்". இத்திரைப்படத்தில் நடிகர்கள் நாசர், நடராஜ் மற்றும் அனகா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஏற்கனவே ஹிப்ஹாப் ஆதியின் இசையமைப்பில் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், மூன்றாவது பாடலால் "உன்கிட்ட சொல்ல" என்ற பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
உன்கிட்ட சொல்ல : ஹிப்ஹாப் ஆதியின் இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி உலகப் போர். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான நாசர், நட்டி, அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல், காதல் மற்றும் வருங்காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வெளியாகிப் பல விமர்சனங்களைப் பெற்றாலும் தற்போது வரை திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் அடுத்த பாடலான “உன்கிட்ட சொல்ல” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலில் ராணுவ வீரர்களின் தியாகங்கள் குறித்து இப்பாடலில் பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் மீனாட்சி இளையராஜா இப்பாடலைப் பாடியுள்ளார். தற்போது “உன்கிட்ட சொல்ல” என்ற வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது..!