‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள் இதோ!
Golden Sparrow Lyric Video | தனுஷ் இயக்கத்தில் 3-ஆவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், விஸ்வாசம் படம் மூலம் பிரபலமடைந்த அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகரான தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அடுத்து அவர் இயக்கிய ‘ராயன்’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3-ஆவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், விஸ்வாசம் படம் மூலம் பிரபலமடைந்த அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் முதல் சிங்கிள் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலில் பிரபல நடிகை ப்ரியங்கா மோகன் நடனமாடியுள்ளார்.