ஆகாஷ் முரளியின் ’நேசிப்பாயா’ படத்தின் டீசர் இதோ..!
Nesippaya Movie Teaser : நடிகர் முரளியின் இளையமகனான ஆகாஷ் முரளியின் நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம் தான் "நேசிப்பாயா". இத்திரைப்படத்தை இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அதிதி ஷங்கர், குஷ்பூ, சரத்குமார் மற்றும் பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது
இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் அறிமுக நடிகரான ஆகாஷ் முரளியின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் “நேசிப்பாயா”. இந்த திரைப்படத்தை சேவியர் பீரிட்டோ தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் முன்னணி பிரபலங்களான சரத்குமார், குஷ்பு மற்றும் பிரபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ஆக்ஷன் மற்றும் காதல் கதை மையமாக கொடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பார்வையானது கடந்த ஜூன் மாதத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.