‘கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் இதோ!
GOLISODA RISING | இந்த வெப்சிரீஸில் பிரபல நடிகர்களான சேரன், ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இமான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி என 7 மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் செப்.13 வெளியாக உள்ளது.
விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ல் வெளியானது ‘கோலி சோடா’ திரைப்படம். 2018-ல் ‘கோலி சோடா 2’ வெளியானது. இதன் தொடர்ச்சியாக தற்போது இதை வரிசையில் ‘கோலி சோடா ரைசிங்’ என்ற வெப்சீரிஸை இயக்கியுள்ளார் விஜய் மில்டன். இந்த வெப்சிரீஸில் பிரபல நடிகர்களான சேரன், ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இமான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி என 7 மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் செப்.13 வெளியாக உள்ளது. இந்த நிலையில் சீரிஸின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.