ஏங்கும் திருநங்கை.. ’நீல நிறச் சூரியன்’ படத்தின் ட்ரெய்லர் இதோ..!
Neela Nira Sooriyan : இந்தப்படம் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாற ஏங்கும் ஒரு திருநங்கை எதிர்கொள்ளும் சங்கடங்களை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகை சம்யுக்தா, கஜராஜ் , கீதா கைலாசம் மற்றும் மசந்த் நடராஜ் போன்ற நடிகர்கள் நடித்துவருகின்றனர். தற்போது இந்த திரைப்படத்தின் "ட்ரெய்லர்" இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ் முன்னிலையில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கத்தில், மாலா மணியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “நீல நிற சூரியன்” (ப்ளூ சன் சைன் ). இத்திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா, கஜராஜ் , கீதா கைலாசம் மற்றும் மசந்த் நடராஜ் போன்ற நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் “முதல் பார்வை” கடந்த செப்டம்பர் 18ல் வெளியான நிலையில் இத்திரைப்படத்தில் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படமானது ஆணாகப் பிறந்து பெண்ணாக மாற ஏங்கும் ஒரு திருநங்கை எதிர்கொள்ளும் சங்கடங்களை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி உள்ளது. தற்போது இந்த “நீல நிற சூரியன்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.