மாரி செல்வராஜின் வலியும் கோபமும் நிறைந்த ‘வாழை’ பட ட்ரெய்லர்!
Vaazhai - Official Trailer | கடந்த ஆண்டு வெளியான, மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’. கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வாழை’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான, மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’. கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. வாழை படம் முதலில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. ஆனால் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ’வாழை’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உணர்ச்சி பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள வாழை படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.