‘மின்மினி’ படத்திலிருந்து வெளியானது ஜனனம் பாடல் வீடியோ!
Jananam | திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015-ம் ஆண்டு குழந்தைப் பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார். ‘மின்மினி’ படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘மின்மினி’. திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015-ம் ஆண்டு குழந்தைப் பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார். ‘மின்மினி’ படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படத்தில் இருந்து ஜனனம் என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.