5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
விடுதலை 2 படத்திலிருந்து வெளியானது ‘தினம் தினம்’ லிரிக்கள் வீடியோ

விடுதலை 2 படத்திலிருந்து வெளியானது ‘தினம் தினம்’ லிரிக்கள் வீடியோ

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2024 17:55 PM

Dhinam Dhinamum | நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன்,  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான இப்படம் காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சினை  மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தது. நடிகர் சூரி இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 2 படத்திலிருந்து லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது. கோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விடுதலை. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வெளியான  திரைப்படம் ‘விடுதலை’.  நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன்,  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான இப்படம் காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சினை  மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தது. நடிகர் சூரி இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். விடுதலைப் படத்தின் முதல் பாக ரிலீசுக்கு பிறகு, உடனே இரண்டாம் பாக பணிகள் தொடங்கியிருந்தாலும், சில காரணங்களால் அந்த படம் உருவாவது தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில் இறுதிக்கட்டத்தை அப்படம் எட்டியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த நிலையில் படத்திலிருந்து ‘தினம் தினம்’ பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது.