‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்திலிருந்து ‘தேவதையப் போல’ வீடியோ பாடல்!
Dhevathai Video Song : இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ”விஷன் சினிமா” தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். ஏகன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பிரிகிதா போன்ற தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் ”யோகிபாபு” நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”கோழிப்பண்ணை செல்லதுரை”. இப்படத்திலிருந்து தற்போது ”தேவதையைப் போலத் தேகமெல்லாம் அழகு பாரு” என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் திருநங்கைகளின் சமூகத்தைப் பற்றியும் அவர்களின் ஆசைகள் பற்றியும் ஒரு விழிப்புணர்வு பாடலாக இருக்கிறது. இத்திரைப்படத்தை ”விஷன் சினிமா” தயாரித்துள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் யோகிபாபு, நடிகை ஐஸ்வர்யா தத்தா ,பிரிகிதா, ஏகம் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்பாடலுக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது வரும் செப்டம்பர் 20 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.