நடிகை சுனைனாவின் “ராக்கெட் ட்ரைவர்” படத்தின் “ஸ்னீக் பீக்”!
இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கத்தில் நடிகர் விஷ்வந்த் மற்றும் சுனைனா போன்றவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் "ராக்கெட் ட்ரைவர்". இத்திரைப்படத்தை மெர்சல், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் அனிருத் வல்லப் உருவாக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
ராக்கெட் ட்ரைவர் : நடிகை சுனைனா மற்றும் விஷ்வந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் “ராக்கெட் ட்ரைவர்”. பிரபல இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கத்தில் மற்றும் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிப்பில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரங்களாக நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ் போன்றவர்கள் நடித்துள்ளனர். இப்படம் ஃபேண்டசி, டிராமா, காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக உருவாக்கியது. இந்த திரைப்படத்தில் லீட் கதாபாத்திரமாக விஷ்வந்த் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது “ராக்கெட் ட்ரைவர்” படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க :பின்னடைவில் ’வேட்டையன்’ வசூல்.. 5 நாட்களில் இவ்வளவுதானா?