சாய் பல்லவியின் அறிமுக வீடியோவை வெளியிட்ட அமரன் படக்குழு
Sai Pallavi's Intro | மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் நடித்துள்ள நடிகை சாய் பல்லவியின் அறிமுக வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த கேரக்டருக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. முதலில், முகுந்த் வரதராஜனின் மனைவியான ஒரிஜினல் இந்து ரெபேக்கா வர்கீஸ் வர, அதன்பிறகு சாய் பல்லவியின் காட்சிகள் தொடங்குகிறது.